நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க அறிவுரை...!

52பார்த்தது
நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க அறிவுரை...!
நீர் ஆதாரங்களில் ஏற்படும் கசப்பான சம்பவங்களை தவிர்க்க சுற்றுச்சுவர் மற்றும் வேலி அமைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி முதன்மை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு ஆற்றுப் படுகைகளிலிருந்தும், ஆழ்துளை கிணறு மற்றும் பல்வேறு ஆழ்துளை கிணறுகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது மட்டும் இல்லாது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கிணறுகளின் மூலமும் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழ்துளை கிணறுகள் மூலம் தரப்படும் நீரானது மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சிறிய அளவிலான தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு , அதன் பின் பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் கண்காணித்து செயல்படுத்தி வருகிறது.
கடந்த சில வருடங்களாக பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் , நீர் தேக்கங்கள் , நீர் ஆதாரங்கள் ஆகியவையில் தவறான நபர்கள் மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் இது பல்வேறு பிரச்சனைகளை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகிறது.
இதனால் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் உள்ள நீர் ஆதாரங்கள் மற்றும் விநியோக கட்டமைப்புகளின் பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி