காளிகாம்பாள் ஆலயத்தில்-40-ஆம் ஆண்டு தீமிதி-திருவிழா

73பார்த்தது
உத்தரமேரூர் வட்டத்திற்குட்பட்ட திருப்புலிவனம்
கிராமத்தில் அமைந்துள்ள,

அருள்மிகு-ஸ்ரீ-திரிசூலகாளிகாம்பாள் ஆலயத்தின்-40- ஆம் ஆண்டு- தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம்
திருப்புலிவனம் கிராமத்தில் அமைந்துள்ள
பழமையான அருள்மிகு ஸ்ரீ- காளிகாம்பாள் ஆலயத்தின் தீமிதி திருவிழாவானது
ஆண்டுதோறும் வெகு விமரிசையாக ஊர்த் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று
திரிசூல காளியம்மனுக்கு
காப்புக் கட்டுதலுடன் துவங்கிய நிகழ்வில்,
அம்மனுக்குசிறப்பு அபிஷேகம்,
மகா தீபாராதனை,
உலக நன்மை வேண்டி வேள்வி யாகம்,
திருவிளக்கு பூஜைகளுடன்-
துவங்கிய நிகழ்வில்,
பக்தர்கள் வேப்பம் சீலை சாத்துதல், கூழ்வார்த்தல்,
ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஆன்மீக சொற்பொழிவு- உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மகளிர் வார வழிபாட்டு மன்றத்தினர் ஊரணி பொங்கலிட்டு,

காப்புக்கட்டி விரதமிருந்த திரளான பக்தர்கள் கோவில் வளாகத்தில், அக்னி குண்டத்தில் இறங்கி
தீ-மிதித்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

அலங்கரிக்கப்பட்ட புஷ்ப-ரதத்தில் திரிசூல காளியம்மன் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தீமிதி-திருவிழாவில் உத்தரமேரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏராளமான செவ்வாடை தொண்டர்கள் கலந்து கொண்டு
ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி