காஞ்சியில் சிதிலமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?

64பார்த்தது
காஞ்சியில் சிதிலமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் பின்புறம் உள்ள கங்கையம்மன் நகரில், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், ஒரு மின்கம்பத்தில் சிமென்ட் காரை உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.

வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இப்பகுதியில் இச்சாலையில் செல்லும் கனரக வாகனம் மின்கம்பத்தின் மீது உரசினாலே உடைந்து, மின்விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, சேதமடைந்த பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி