தி. மு. க. , கவுன்சிலர்களில் உருவானது... மூன்று அணி!

73பார்த்தது
தி. மு. க. , கவுன்சிலர்களில் உருவானது... மூன்று அணி!
காஞ்சிபுரம் மாநகராட்சி தி. மு. க. , கவுன்சிலர்கள், ஆதரவு, எதிர்ப்பு என மூன்று பிரிவாக செயல்படுவார்கள் என்பதால், மேயர் தரப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அ. தி. மு. க. , கவுன்சிலர்களின் ஆதரவை தந்திரமாக மேயர் தரப்பு பெற்றிருப்பது, அ. தி. மு. க. , கவுன்சிலர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், அக். , 5ம் தேதிக்கு பின், டிச. , 6ல் மாநகராட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.


கூட்டரங்கில், 'மாநகராட்சி கமிஷனர் தங்களை மதிக்கவில்லை' எனக்கூறி, தி. மு. க. , கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து, அ. தி. மு. க. , மற்றும் சுயேட். , கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.

இதனால், மேயருடன் சேர்த்து 13 கவுன்சிலர்கள் மட்டுமே கூட்டரங்கில் இருந்தனர். இதனால், மூன்றில் ஒரு பங்கு கவுன்சிலர்கள் கூட பங்கேற்காததால், கூட்டத்தில் கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேறவில்லை.

அடுத்த சில நாட்களில் கூட்டம் நடத்தாமல் இருந்ததால், மேயர் மகாலட்சுமி பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அ. தி. மு. க. , கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி