தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா பேட்டி

50பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறுகையில் குறிப்பாக சமீபத்திலே கட்டிடங்களுக்கு 3300 சதுர அடி கட்டமைப்புக்கு எந்த இடர்பாடும் இல்லாமல் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு தருவதாக அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் ரவுடிகளை அடக்குவதற்கு பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்த முயற்சி தோய்வு இல்லாமல் நடந்து தமிழகத்திலே ரவுடிகள் இல்லாத தமிழகமாக உருவெடுப்பதற்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு துணை இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக கூறினார் ரவுடிகளை ஒழிக்க காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு வணிகர் சங்க பேரமைப்பு முழு ஒத்துழைப்பு நல்கும் என்றவர் பொதுமக்கள் வணிகர்கள் அச்சம் இல்லாமல் தொழில் செய்வதற்கும் தமிழகத்தில் ரவுடிகள் இல்லையென்று சொன்னால் பொதுமக்கள் வணிகர்கள் அச்சமில்லாமல் தொழில் செய்வர் என்றார் தொடர்ந்து பேசியவர் மின்சார கட்டண உயர்வு நேற்றைய தினம் தமிழக அரசு மின்சாரக் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறார்கள் ஏற்கனவே நாங்கள் திணறி கொண்டிருக்கிறோம் ஆகையால் மின்சார கட்டணத்தை கட்டாயமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திரும்ப பெற வேண்டும் என்பதை கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய செய்தி