ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடையால் கர்ப்பிணியர் அவதி

58பார்த்தது
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடையால் கர்ப்பிணியர் அவதி
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, வல்லம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் நாள்தோறும் சிகிச்சை பெறுகின்றனர்.

தவிர, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏராளமான கர்ப்பிணியர் மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர். இந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி இல்லை.

இதனால், இப்பகுதியில் மின் தடை ஏற்படும் போது, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதி அடைகின்றனர்.

இந்த நிலையில், பராமரிப்பு பணிக்காக நேற்று, காலை 9: 00 மணி முதல், மதியம் 2: 00 மணி வரை வல்லம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது.

இதனால், நேற்று, வல்லம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்த கர்ப்பிணியர், காற்று வசதி இல்லாமல் அவதி அடைந்தனர். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் ஒருவர் மட்டும் இருப்பதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, செவ்வாய், வியாழக்கிழமைகளில், கர்ப்பிணியர் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு கூடுதல் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என, கர்ப்பிணியர் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி