காஞ்சிபுரம் சட்டசபை தொகுதி, வாலாஜாபாத் ஒன்றியம், லப்பை கண்டிகை துணை கிராமத்தில், 365 சிறுபான்மை பிரிவு ஓட்டுகள் உள்ளன. இவர்கள் ஓட்டு போட, அருகே உள்ள வளத்துார் நடுநிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும்.
அழைத்துச் செல்லும் அரசியல் கட்சியினருக்கு சாதகமாக, அவர்கள் ஓட்டளிக்க வேண்டியதாகிறது. இதை தவிர்க்க, லப்பை கண்டிகை தொடக்கப்பள்ளி கட்டடத்தில், ஓட்டுச்சாவடி அமைக்க எதிர்பார்க்கின்றனர்.
லப்பை கண்டிகை கிராமத்தினர் கூறியதாவது:
தேர்தல் நேரத்தில் கள்ள ஓட்டு போடுவதாகக் கூறி, குர்தாவை அகற்ற சொல்லும் அதிகாரிகள், ஓட்டளிக்க வசதி செய்து தருவதில்லை. ஓட்டளிக்க 3 கி. மீ. , துாரம் செல்ல வேண்டியதாகிறது.
வாகனங்கள் இல்லாதவர்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எப்படி செல்வர் என, யோசித்து செயல்பட வேண்டும்.
லப்பை கண்டிகை தொடக்கப்பள்ளியில் ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும். இல்லையென்றால், லோக்சபா தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்.