காஞ்சியில் இடிதாக்கி விவசாயி பலி

3316பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் வ/42. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் தேவரியம்பாக்கம் பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டிருந்த விலை நிலங்களில் மழை நீர் தேங்கியது.

விலை நிலங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றுவதற்காக இடியுடன் பெய்து வரும் கனமழையும் பாராமல் இளங்கோவன் கழனிக்கு சென்று விலை நிலங்களில் தேங்கிய மழை நீரை அகற்றி கொண்டிருந்தார்.

அப்போது இடி தாக்கி இளங்கோவன் கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு இளங்கோவனை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.