காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..

80பார்த்தது
காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பெரிய தெரு முனை பகுதியில் பாமக பிரமுகர் ஜவகர் என்பவர் கடை அருகே திமுக புதிய கொடிக்கம்பம் நடுவதற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த போது அதனை ஜவகர் தடுத்து நிறுத்தி தேர்தல் நன்னடத்தை விதிகள் இருப்பதாக கூறியதும் திமுகவினர் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் அப்பகுதியில் அருள்மணி என்பவருடன் பத்துக்கும் மேற்பட்டோர் வந்து கொடி கம்பம் பதிய வைத்துள்ளனர்.

இதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த ஜவகர் மற்றும் அருள்மணி இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்நிலையில் இத்தகவலை அறிந்த பாமகவினர் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நீடித்து இருபுறமும் இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி முரளி தலைமையிலான காவல்துறையினர் துரிதுமாக செயல்பட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


மேலும் அப்பகுதியில் பதட்டத்தை தணிக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நடப்பட்ட கொடி கம்பத்தை அகற்றும் பணியும் நடைபெறும் என தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்தி