காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு சமீப நாட்களாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
அடுத்தகட்டமாக, சிவன்தாங்கல் பகுதியில், 1. 87 கோடி ரூபாய் மதிப்பில், அறிவுசார் மையம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவு சார் மையத்தின் தெற்கு, வடக்கு, கிழக்கு என மூன்று பக்கத்திலும், பேரூராட்சி சார்பில் கடைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, 36. 6 லட்ச ரூபாய், பேரூராட்சியின் பொது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில், 8 லட்ச ரூபாய் மதிப்பில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், கச்சிப்பட்டு உடற்பயிற்சி கூடம் வெளியே சிமென்ட் கல் சாலை அமைக்க 4 லட்ச ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் முடிந்தவுடன் பணிகள் துவங்க உள்ளன.