"உயிரியல் பூங்கா துாதுவர்' திட்டம் மாணவர்களுக்கு அழைப்பு"

53பார்த்தது
"உயிரியல் பூங்கா துாதுவர்' திட்டம் மாணவர்களுக்கு அழைப்பு"
கோடை விடுமுறையை உற்சாகமாகவும், அறிவு நிரம்பியதாகவும் மாற்ற, வண்டலுார் உயிரியல் பூங்கா நிர்வாகம், மாணவர்களுக்கான, 'உயிரியல் பூங்கா துாதுவர்' திட்டத்தை, பூங்கா இணையதளத்தில் அறிவித்துள்ளது.

ஐந்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்பு படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

பங்கேற்கும் மாணவர்கள், பல்வேறு வகையான வன விலங்குகளை பற்றி அறிந்து கொள்ளும் வகையில், தனித்தனி வகுப்புகளாக பாலுாட்டிகள், பறவைகள், ஊர்வன, வண்ணத்துப் பூச்சிகள்மற்றும் பூங்காவின் செயல்பாடுகளை பற்றி, பூங்கா களத்தில் சென்று அறியும் வாய்ப்பு பெறுவர்.

இந்த நிகழ்ச்சியானது, உயிரியல் பூங்காவின் வனவிலங்கு மருத்துவர்கள், உயிரியலாளர்கள் மற்றும் பூங்கா கல்வியாளர்களால் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு தலைப்பிற்கும் மாணவர்களுக்கு பயிற்சி தாள்களுடன், நிகழ்ச்சிக்கு வேண்டிய பொருட்கள் அடங்கிய தொகுப்புபை வழங்கப்படும்.

இம்முகாமானது, மூன்று நாட்களுக்கு காலை, 9: 30 மணி முதல் மதியம் 12: 30 மணி வரை நடைபெறும்.

ஒவ்வொரு வகுப் பிலும், 50 மாணவர்கள், கோடை தட்ப வெட்ப நிலையை கருத்தில் கொண்டு, ஐந்துபிரிவுகளாக அறிவிக்கப்பட உள்ளது.

வரும், 24 முதல் 27ம் தேதி; மே 1 முதல் 3ம் தேதி; மே 8 முதல் 10ம் தேதி; ஜூன் 5 முதல் 7ம் தேதி, ஜூன் 12 முதல் 14ம் தேதி என, ஒவ்வொரு பிரிவிலும், 50 மாணவர்கள் வரை பங்கேற்கலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி