நேரடிநெல் கொள்முதல் நிலைய ஊழியரை மிரட்டிய இருவர் கைது

64பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்ட பழையனூர் படாளம் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர் பொருள் வானிபகழக
பருவகால காவலராகிய செல்வம் என்பவர் பழைனூர் பகுதியில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியில் இருந்துள்ளார். அப்போது ஆலப்பாக்கம் சக்திநகர் பகுதியை மணி மற்றும் திருமணி இந்திராநகர் பகுதியை சேர்ந்த பரமசிவம் ஆகியோர் பழையனூர் நேரடி கொள்முதல் நிலையத்திற்குள் அனுமதியின்றி அத்தமீறி உள்ளே நுழைந்து நாங்கள் இருவரும் சமூக ஆர்வலர்கள் கொள்முதல் நிலையத்தை ஆய்வு மேற்க்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

அதனால் விலைப்பட்டியல் குறிப்பு அட்டை எங்கே அதை எடுத்து வரச்சொல்லி செல்வத்தை அந்த துறைசார்ந்த உயர் அதிகாரிகள் போல மிரட்டியதாகவும்,
பொதுமக்கள் மத்தியில் கையை ஓங்கி அடிக்க முற்ப்பட்டு அசிங்கமாக ஒருமையில் ஆபாசமாக திட்டி செல்வத்தை பணி செய்விடமால் இடையூறு செய்து கொலை மிரட்டல் விட்டதாகவும் அந்த சம்பவத்தை வீடியோ காட்சிகளாக படம் பிடித்து அதை ஆதாரமாக கொண்டு படாளம் காவல்நிலையத்தில்
மணி மற்றும் பரமசிவம் மீதும் செல்வம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மணி மற்றும் பரமசிவம் உள்ளிட்ட இருவரையும் கைது செய்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி