மல்லிகேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்

53பார்த்தது
மல்லிகேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரத்தில் மல்லிகேஸ்வரி அம்பிகை உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.

அத்துறையின் ஆளவந்தார் அறக்கட்டளை, இக்கோவிலை நிர்வகிக்கிறது. பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், நீண்டகாலத்திற்கு முன் சீரழிந்தது.

அதை புதுப்பிக்க முடிவெடுத்து, காஞ்சி சங்கர மட சுவாமி பாலாலயம் செய்தார். அதன்பின்னும் திருப்பணிகள் துவக்கப்படாததால், கோவில் முற்றிலும் சீரழிந்து, வழிபாடு இன்றி குப்பை களமானது.

இந்நிலையில், பக்தர்களே கோவிலை புனரமைத்து, கடந்த 2004ல் மஹா கும்பாபிஷேகம் நடத்தினர். துவக்கத்தில் சுவாமி, அம்பாள் ஆகியோர் சன்னிதிகள் மட்டுமேஇருந்தன. பின், நடராஜர் சன்னிதியும், முதன்முறையாக கொடிமரமும் அமைக்கப்பட்டன.

உற்சவ சுவாமியர் சந்திரசேகர், அம்பாள், விநாயகர், முருகர், நடராஜர் மற்றும்சண்டிகேஸ்வரர்ஆகியோருக்கு, உலோக சிலைகளும் செய்யப்பட்டு, கடந்த 2017ல் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், நன்கொடை வாயிலாக, கோவில் நுழைவாயிலில் ராஜகோபுரம் அமைக்க, நந்திகேஸ்வரர் பிரதோஷ குழுவினர் முடிவெடுத்தனர்.

கடந்த ஆண்டு பணிகள்துவக்கப்பட்டு, பாறைகற்களில், மூன்று நிலைகளில், 23 அடி உயர கோபுரம் கலையம்சத்துடன் அமைக் கப்பட்டுள்ளது.
வரும் செப். , மாதம் மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, கோவில் செயல் அலுவலர் சக்திவேல் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி