பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பாலாபிஷேகம்

65பார்த்தது
பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பாலாபிஷேகம்
காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

நேற்று ஆடி மங்கள வார தினத்தை முன்னிட்டு, நேற்று, காலை 10: 00 மணி அளவில், 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது.

வெண்பட்டு உடுத்தி பர்வதவர்த்தினி அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். திருமண தடை, சந்தான பாக்கியம் பெற விரும்பியோர்கள் மற்றும் பல்வேறு தரப்பு பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி