பகுதி நேர நியாய விலைக் கடையை திறக்க வேண்டும் என கோரிக்கை

62பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மணமை ஊராட்சியில் பெருமாலேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் நியாய விலை கடைகள் இயங்கி வருகிறது மணமை ஊராட்சி கீழக்கழனி பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பில் பகுதி நேர நியாய விலை கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணியும் நடைபெற்றது கட்டிடப் பணிகள் முடிவுற்று கடந்த ஜனவரி மாதம் திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார் அன்றைய தினம் பொங்கல் தொகுப்பு பொருட்களையும் வழங்கினார், அதோடு இதுவரையில் நியாய விலை கடையில் பொருட்கள் ஏதும் வழங்காமல் இருந்தது இதனால் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கேட்டபோது குடும்ப அட்டையை உங்கள் பகுதிக்கு தனியாக பிரிக்க வேண்டும் அதற்கு வேலைகள் அதிகம் உள்ளது எங்களால் உடனே செய்ய முடியாது என பேசி திருப்பி அனுப்பி விடுகின்றனர் பலமுறை மனு அளித்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்தி