புதிதாக அமையவுள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே நெற்குணம், வாயலூர், புளியனி உள்ளிட்ட நான்கு கிராமங்களுக்கு மத்தியில் புதிதாக கல்குவாரி அமைக்க தனிநபர் ஏற்பாடு செய்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் இந்தப் பகுதியில் கல்குவாரி அமைந்தால் தங்கள் பிரதான தொழிலாளான விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படும் எனவும் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படும் அதேபோன்று காற்று மாசு ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என கூறி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு மனு அளிக்க 20 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் அனுமதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.