செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அடுத்த பொத்தேரி பகுதியில் எஸ்ஆர்எம் கல்லூரி அருகே போதைப்பொருட்கள் தொடர்பாக மாணவர்கள் தங்கி இருந்த வீடுகளில் சோதனைகள் நடைபெற்றது. அன்பு தொடர்பாக மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் இது தொடர்பாக கல்லூரியிலும் பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட சோதனையின் போது சிக்கிய மாணவர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என அனைவருடைய பெற்றோர்களையும் வரவழைத்து அறிவுரை கூறுவதற்காக கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த கொண்ட சீனிவாச நிகில் (20) எஸ் ஆர் எம் கல்லூரியில் b. teach நான்காம் ஆண்டு படித்தவர் வருகிறார். பொத்தேரி அருகே உள்ள கக்கன் கருவில் அபெளட் வேலி என்ற அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நீக்கில் தனது நண்பர்களான ஜெயந்த் மற்றும் சாக்ஷி ஆகியோருடன் தனது அறையில் இருக்கும் பொழுது நேற்று இரவு , செல்போனில் தனது பெற்றோர்களிடம் பேசிவிட்டு நாலாவது மாடியில் உள்ள தனது அறையில் உள்ள பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.