மாமல்லபுரம் சிற்பங்களை காண, சுற்றுலா வரும் சர்வதேச பயணியருக்காக, தமிழக சுற்றுலாத்துறை, மத்திய கலாசார அமைச்சகத்துடன் இணைந்து, மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நாட்டிய விழா நடத்துகிறது.
இவ்விழா, கடந்த டிச. , 22ம் தேதி துவக்கப்பட்டு, ஜன. , 21 வரை தினமும் மாலை நடக்கிறது. இந்தியாவின் பரதம், குச்சிப்புடி, ஒடிசி, கதகளி உள்ளிட்ட பாரம்பரிய நாட்டியக் கலைகள், கரகம், காவடி, சிலம்பம், தப்பாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சுற்றுலாத்துறை விழா நிகழ்வை ஆவணமாக பதிய, வீடியோ காட்சியாக பதியும். 2021 விழா கலை நிகழ்ச்சிகளை, முதல் முறையாக அத்துறையின் 'யு டியூப்' சேனலில் நேரடியாக ஒளிபரப்பியது.
தற்போதைய விழாவை, நேரடி ஒளிபரப்பாக இன்றி, வீடியோ காட்சி படப்பதிவை, அதன் 'யு டியூப்' சேனலில் ஒளிபரப்புகிறது. விழா கலைநிகழ்ச்சிகளை, TamilnaduTourismOnline என்ற இணைப்பில் காணலாம். "