செங்கல்பட்டு: ஆட்சீஸ்வரர் கோயிலில் மஹா சனி பிரதோஷ விழா

60பார்த்தது
ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் மஹா சனி பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் இவ்வாண்டு இறுதி மார்கழி மாத சனி பிரதோஷ விழாவில் நந்தியம் பெருமானுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்து அலங்காரம் செய்து மேளதாளங்களுடன் தீப ஆராதனைகள் செய்தனர். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் பக்தர்கள் கலந்துகொண்டு 'ஓம் நமச்சிவாய' என கூறி சாமி தரிசனம் செய்தனர். கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி