வனத்துறை ஒப்புதல் கிடைத்தும் சாலை பணி... இழுத்தடிப்பு

72பார்த்தது
வனத்துறை ஒப்புதல் கிடைத்தும் சாலை பணி... இழுத்தடிப்பு
நல்லம்பாக்கம் வனப்பகுதியில் குறுக்கீடும் சாலையை சீரமைக்க, 6. 90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'டெண்டர்' விடப்பட்டும் பணிகள் துவக்கப்படாமல் உள்ளது. இப்பணியை விரைந்து துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, ஊரப்பாக்கம், காட்டூர், காரணை புதுச்சேரி, அருங்கால், குழுளி, கீரப்பாக்கம், நல்லம்பாக்கம் வரை, நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் சாலை உள்ளது.

இச்சாலையில், நல்லம்பாக்கம் 2 கி. மீ. , துாரம் சாலை, வனத்துறை வழியாக செல்கிறது.

இப்பகுதியில், மத்திய தார் சுடுகலவை இயந்திரங்கள், ஜல்லி அரவை என, தலா 100க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் உள்ளன. ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை இயந்திரங்கள் 30க்கும் மேற்பட்டவை உள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி