வாக்கு பெட்டிகளை அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பும் பணி

69பார்த்தது
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறுகிறது அதற்கான வாக்கு பெட்டிகளை அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பணியில் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறை

செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது அதற்கான வாக்கு பெட்டிகளை கடந்த காலங்களில் லாரிகள் மூலமாக 10 ஊராட்சி 15 ஊராட்சி என காலதாமதமாக அனுப்புவதும் அதேபோல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நள்ளிரவு வரை வாக்கு பெட்டிகளை எடுத்துக்கொண்டு வாக்கு என்னும் மையங்களுக்கு அனுப்பும் பணி கால தாமதமாக நடைபெறும் அதை தவிர்க்கும் வகையில் தற்போது இரண்டு அல்லது மூன்று ஊராட்சிகளுக்கு அல்லது மூன்று நான்கு வாக்குச்சாவடி மையங்களுக்கு கார்கள் மூலமாக அனுப்பப்படுகிறது அதற்கான கார்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் கார்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தி இன்று அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜிபிஎஸ் பொருத்தும் பணியில் இன்று 50க்கும் மேற்பட்ட கார்களுக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு சோதிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி