குடிநீர் பணிகளுக்காக சிமென்ட் சாலை சேதம்

77பார்த்தது
குடிநீர் பணிகளுக்காக சிமென்ட் சாலை சேதம்
காஞ்சிபுரம் அடுத்த, சிங்காடிவாக்கம் கிராமத்தில் இருந்து, சின்னையன்சத்திரம் வரை, இருவழிச் சாலை இருந்தது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, சிங்காடிவாக்கம், அத்திவாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சுற்றி, பல தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன.

இதனால், தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், 21. 50 கோடி ரூபாய் செலவில், 2021ம் ஆண்டு நான்குவழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி துவங்கி, 2022ம் ஆண்டு நிறைவு பெற்றது.

இந்த சிமென்ட் சாலை, குடிநீர் பணிக்கு சேதப்படுத்தப்பட்டு வருகிறது என, சமூக ஆர்வலர்கள் இடையே, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, அத்திவாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'சின்னையன்சத்திரம் கிராமத்திற்கு செல்லும் குடிநீர் பைப் லைன் பழுதடைந்ததால், புதிய பைப் லைன் போடும் பணி நடந்து வருகிறது. வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லை. இருப்பினும், சேதத்தை சரி செய்து விடலாம்' என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி