தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(செப்.17) ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட விபத்துகளால் சுமார் 3 கிலோமீட்டர் அளவில் அணிவகுத்து நின்ற வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து பணிமனை அருகே தனியார் கம்பெனியில் வேலைக்கு செல்வதற்காக பெண்கள் வேனில் சென்று கொண்டிருந்த போது வேனின் பின்னால் வந்த லாரி மோதியதில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
அதேபோல் சிலாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறம் கார் மோதியது. மோதிய வேகத்தில் கார் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டது அரை மணி நேரம் போராடி மதுராந்தகம் காவல் துறையினர் காரையும் அதில் பயணம் செய்த நபர் ஒருவரையும் மீட்டெடுத்தனர். காரில் பயணம் செய்த ஒருவர் காயத்துடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு மதுராந்தகம் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
இதனால் சிலாவட்டம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் அளவில் அணிவகுத்து நின்ற வாகனங்களால் அரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.