அடிப்படை வசதியில்லாத 5 சிப்காட் பகுதிகள்... பாராமுகம்!

82பார்த்தது
அடிப்படை வசதியில்லாத 5 சிப்காட் பகுதிகள்... பாராமுகம்!
சென்னைக்கு அருகே உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், தொழில் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளதால், 30 ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு, அதன் வாயிலாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இங்குள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்கி வருகின்றன.

இதில், எலக்ட்ரானிக், ஹார்டுவேர், தொலைதொடர்பு சாதனங்கள், மோட்டார் வாகனங்கள், டயர், ரசாயனம், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும், 70, 000 கோடிக்கு உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இங்குள்ள தொழிற்சாலைகளை நம்பி, வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தங்கி பணிபுரிகின்றனர்.

அவ்வாறு வரும் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாமல் இருந்தது. கனரக வாகனங்களை இயக்குபவர்களுக்கும், வாகன நிறுத்துமிடம் இல்லாமல் இருந்தது. சாலைகளின் அகலம் குறைவாகவும், சிப்காட் பகுதி சுகாதாரமின்றியும் இருந்தது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிலாளர்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களுக்கான அடிப்படை உட்கட்டமைப்புகள், சிப்காட் வாயிலாக அடுத்தடுத்து உருவாக உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி