"டூ - வீலர் திருடிய இளைஞர் கைது

81பார்த்தது
"டூ - வீலர் திருடிய இளைஞர் கைது
காஞ்சிபுரம், பெருநகர் அருகேயுள்ள பென்னலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு. ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த டிச. , 5ம் தேதி இரவு, இவரது மற்றும் மைத்துனர் இருசக்கர வாகனங்களை வீட்டு வெளியே நிறுத்திவிட்டு துாங்க சென்றுள்ளார்.

அதிகாலை வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தபோது, இரண்டு வாகனங்களும் மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது.


இதையடுத்து, பெருநகர் காவல் நிலையத்தில், அன்பு புகார் அளித்திருந்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், திருடியவர் காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்த விஷ்ணு, 22, என்பது தெரியவந்தது.

அவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மற்றொரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி