மதுபாட்டில் கடத்திய இருவருக்கு காப்பு By Rajasekar 56 பார்த்தது May 18, 2024, 13:05 IST சூணாம்பேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, புதுப்பட்டு கிராமத்தின் வழியாக புதுச்சேரியில் இருந்து கள்ளத்தனமாக மதுபாட்டில் கடத்தி வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து, நேற்று காலை, புதுப்பட்டு கிராமத்தில் சூணாம்பேடு இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையில், போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை, சந்தேகத்தின் பேரில் மடக்கி, அவர்களையும், இருசக்கர வாகனத்தையும் சோதனை செய்தனர்.
அதில், அவர்களிடம் இருந்து 75 டின் பீர், 120 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், சூணாம்பேடு பகுதியை சேர்ந்த ராம்கி, 25, அப்பு, 25, ஆகிய இருவரும், புதுச்சேரியில் இருந்து கள்ளத்தனமாக மதுபாட்டில் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து, சூணாம்பேடு போலீசார் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.