"காஞ்சியில் பன்றிகள் தொல்லை

57பார்த்தது
"காஞ்சியில் பன்றிகள் தொல்லை
காஞ்சிபுரம் மாநகராட்சி, டெம்பிள் சிட்டி, குமரேசன் நகரில், சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ள பகுதியில், 20க்கும் மேற்பட்ட பன்றிகள் தஞ்சமடைந்துள்ளன. உணவுக்காக புதரில் இருந்து வெளியே வரும் பன்றிகள் சாலையோரம் உள்ள குப்பையை கிளறுகின்றன. வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் காய்கறி, பழச்செடிகளை நாசப்படுத்துகின்றன. சாலையின் குறுக்கே ஓடும் பன்றிகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, டெம்பிள் சிட்டியில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து வனப்பகுதியில் விட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி