மேட்டுக்குப்பத்தில் 'பேவர் பிளாக்' சாலை அமைப்பு

53பார்த்தது
மேட்டுக்குப்பத்தில் 'பேவர் பிளாக்' சாலை அமைப்பு
மேல்கதிர்பூர் ஊராட்சி, மேட்டுக்குப்பம் கிராமம், அம்மன் நகரில் உள்ள இரு தெருக்களுக்கு சாலை வசதி இல்லாமல், மண் சாலையாக இருந்து வந்தது.

போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்த இப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023 - 24ன் கீழ், 7. 60 லட்சம் ரூபாய் செலவில், 130 மீட்டர் நீளத்திற்கு இரு தெருக்களுக்கு, 'பேவர் பிளாக்' சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி