அமெரிக்கா செல்லும் விமானம் ரத்து பயணிகள் அவதி

82பார்த்தது
லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, சென்னையில் இருந்து பிராங்க் பார்ட் நகருக்கு செல்ல வேண்டிய, லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம் இன்று ரத்து. இதனால் அமெரிக்கா, கனடா, ஜப்பான் உள்ள நாடுகளுக்கு செல்ல வேண்டிய 250க்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் தவிப்பு.

ஜெர்மன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்குவது லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம். இந்த விமான நிறுவனம், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகளை இயக்கி வருகிறது. இந்த விமான நிறுவனத்தில், சமீப காலமாக ஊதிய உயர்வு கேட்டு, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அதனால் நாடு முழுவதும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று ஒரு நாள் மீண்டும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

டேக்ஸ் :