மரண பீதி!... பரனுார் - ஆத்துாரில் தொடரும் விபத்துகள்

65பார்த்தது
மரண பீதி!... பரனுார் - ஆத்துாரில் தொடரும் விபத்துகள்
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனுார் சுங்கச்சாவடி முதல் மாவட்ட எல்லையான ஆத்துார் சுங்கச்சாவடி வரை, 50 கி. மீ. , தொலைவிற்குள், கனரக வாகனங்களால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு, கொத்துக்கொத்தாக உயிர் பலிகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும், 500க்கும் மேற்பட்ட விபத்துகளில், 154 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலை, தென் மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கிய தடம். இந்த தடத்தில், பெருங்களத்துார் முதல் அச்சிறுபாக்கம் வரை, செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் வருகின்றன.

இதில், செங்கல்பட்டு- - தொழுப்பேடு வரை, 30 கி. மீ. , துாரத்தில் கனரக வாகனங்கள் மோதி, அதிக அளவிலான விபத்துகள் நடந்து வருகின்றன.

கடந்த மார்ச் 12ம் தேதி, மதுராந்தகம் அடுத்த சிறுநாவலுாரில், தனியார் பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரி மீது உரசியதில், பேருந்தில் பயணம் செய்த, நான்கு தனியார் கல்லுாரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதே போல், கடந்த 15ம் தேதி அதிகாலை, மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியில், பண்ருட்டி நோக்கி சென்ற கார், முன்னே இரும்பு ஏற்றி சென்ற லாரி மீது மோதியதில், காரில் பயணம் செய்த பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி