மாமல்லபுரம் சுற்றுலா தளத்தில் இன்று ஒருநாள் இலவச அனுமதி

2563பார்த்தது
சர்வதேச மகளிர் தினமான இன்று மாமல்லபுரம் பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களை இன்று ஒரு நாள் கட்டணமின்றி இலவசமாக கண்டு களிக்கலாம் என தொல்லியல் துறை அறிவிப்பு.

சுற்றுலாத்தலங்களில் புகழ்பெற்று விளங்கக் கூடியது மாமல்லபுரம் இப்பகுதியில் பல்லவர் கால புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், புளிக்குகை, வெண்ணை உருண்டை பாறை, அர்ஜுனன் தபசு, ஆகிய சுற்றுலா தளங்களை தினந்தோறும் பல ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்து வருகின்றனர். இவைகளை சுற்றிப் பார்க்க வெளிநாட்டினருக்கு ஒரு நபருக்கு 600 ரூபாய் எனவும், உள்ளூர் பகுதி மக்களுக்கு ஒரு நபருக்கு 40 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயித்து தினந்தோறும் அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு மாமல்லபுரம் சுற்றுலா தளங்களை இன்று ஒரு நாள் கட்டணமின்றி இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி