மர்மமான முறையில் உயிரிழந்த வட மாநில இளைஞர்

538பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் உணவகம் இயங்கி வருகிறது உணவகத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மலையா குறியா என்பவர் சமையல் உதவியாளராக அந்த உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு தலையில் பலத்த காயங்களுடன் கிடந்து உள்ளார் அவரை மீட்டு வந்த உணவக பணியாளர்கள் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வந்து மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பார்த்ததில் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் இவருடைய உடலில் ஏற்பட்டுள்ள காயம் சந்தேகத்திற்குரியது எனவும் இவருடைய இறப்பில் சந்தேகம் உள்ளதால் மருத்துவர்கள் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இவரை யாரேனும் அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என பல்வேறு கோணங்களில் மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி