பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்பு; பாஜகவினர் கொண்டாட்டம்

64பார்த்தது
பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்பு; பாஜகவினர் கொண்டாட்டம்
18-வது மக்களவைக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக இந்தியா முழுவதும் நடைபெற்று நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து ஜூன் நான்காம் தேதி வாக்கிய எண்ணிக்கை நடைபெற்ற அதில் பாஜக கூட்டணி அமோக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.
அதன் அடிப்படையில் பாரதப் பிரதமராக மூன்றாவது முறை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். இவருடன் பல்வேறு கூட்டணி கட்சியினரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக சார்பில், அறிஞர் அண்ணா அரங்கம் அருகே பட்டாசுகள் வெடித்தும், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில், பேண்ட் வாத்தியங்கள் முழங்க, நான்கு ராஜ வீதிகளில் பாரத் மாதா கி ஜே, மீண்டும் மோடி என்ற கோஷங்களுடன் நகரில் முக்கிய வீதிகள் வழியாக சென்று வலம் வந்து நடமாடி, புஸ்வாணங்கள் கொளுத்தி மகிழ்ந்தனர்.
இதில் மாநகர மேற்கு மண்டல தலைவர் ஜீவானந்தம், மாவட்ட துணை தலைவர் தூரம் விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர் தமிழரசன் , மாவட்ட இளைஞரணி தலைவர் ஜானகிராமன், காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடாதிபதி கர்சணி சுவாமி அனுபவஆனந்த், காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானிகர் நடராஜசாஸ்திரிகள், தேசிய மொழி பிரிவு மாவட்டத் தலைவர் ராஜேஷ் ஜெயின் , செந்தில் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி