விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

52பார்த்தது
சென்னை விமான நிலையத்திற்கு இரண்டு வாரங்களில், வந்த ஆறு வெடிகுண்டு புரளி மிரட்டல்களில், ஒரு வெடிகுண்டு புரளி மிரட்டலில் சம்பந்தப்பட்ட, தஞ்சை மாவட்டம் திருவாயூரை சேர்ந்த இளைஞரை, சைபர் கிரைம் பிராஞ்ச் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை பெரம்பூரில் எதிர் வீட்டுக்காரரை பழிவாங்குவதற்காக, இந்த செயலை செய்ததாக, கைதான இளைஞர் வாக்குமூலம். சென்னை விமான நிலையத்திற்கு மேலும் 5 வெடிகுண்டு புரளிகளை கிளப்பிவிட்டவர்களும் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை விமான நிலையத்திற்கு கடந்த 18ஆம் தேதி காலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதை எடுத்து சென்னை விமான நிலையத்தில், வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அது வெரும் புரளி என்று தெரிய வந்தது. ஆனாலும் சென்னை மாநகர காவல் ஆணையராகத்தின் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிராஞ்ச் போலீசார், வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதை அடுத்து தீவிர விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, திருவையாறில் இருந்து, இந்த மிரட்டல் இமெயில் வந்துள்ளது தெரிய வந்தது. இதை அடுத்து சென்னை மத்திய குற்ற பிரிவின் சைபர் கிரைம் பிராஞ்ச் போலீஸ் தனிப்படையினர், தஞ்சை மாவட்டம் சென்று புலன் விசாரணை நடத்தியதில், திருவையாறு பகுதியை சேர்ந்த பிரசன்னா (27) என்பவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி