காஞ்சி அம்மன் கோவில்களில் நகைகள், பணம் கொள்ளை

4200பார்த்தது
காஞ்சி அம்மன் கோவில்களில் நகைகள், பணம் கொள்ளை
காஞ்சிபுரம் அடுத்த, பெரியநத்தம் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை, கிராமத்தினர் நேற்று அறிந்தனர். இதுகுறித்து, மாகரல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில், கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், அம்மன் கழுத்தில் இருந்த 1. 5 சவரன் தங்கத் தாலியை கொள்ளையடித்து, அங்கிருந்த அம்மன் ஆடைகளுக்கு தீயிட்டு கொளுத்திச் சென்றது தெரிந்தது.

அதேபோல, அருகில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலிலும், பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். வழக்குப்பதிவு செய்த மாகரல் போலீசார், மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி