உத்திரமேரூர்: கண்ணிமைக்கும் நேரத்தில் 15சவரன் அபேஸ்!

2955பார்த்தது
உத்திரமேரூர்: கண்ணிமைக்கும் நேரத்தில் 15சவரன் அபேஸ்!
உத்திரமேரூர் அடுத்த தீட்டாளம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மனைவி ரேவதி, 52. ரேவதி வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்த மர்ம நபர் ஒருவர், பித்தளை பாத்திரங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள், தங்க நகைகளுக்கு பாலிஸ் போடுவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து, ரேவதி தன் வீட்டில் இருந்த பித்தளை பூஜை பாத்திரங்கள் மற்றும் கால் கொலுசு போன்றவற்றை பாலிஸ் போட கொடுத்து உள்ளார். அதை பாலிஸ் போட்ட மர்ம நபர், தங்க நகைகள் மினுமினுக்க செய்யும்படி பாலிஸ் போடுவதாக கூறியுள்ளார். இதை நம்பிய ரேவதி, வீட்டில் இருந்த 5 சவரன் தங்க செயின் மற்றும் தன் மாமியார் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயின், நான்கு வளையல்கள் என, 15 சவரன் நகைகளை பாலிஸ் போட கொடுத்துள்ளார்.

அந்த நகைகளை பாலிஸ் போட்ட மர்ம நபர், நகைகளை துடைத்தபடி மொபைல்போனில் பேசிக்கொண்டே சாலைக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு மர்ம நபருடன் அமர்ந்து கண் இமைக்கும் நேரத்தில் இருவரும் தப்பினர்.

இது குறித்து, ரேவதி அளித்த புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி