சேதமான சிப்காட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

61பார்த்தது
சேதமான சிப்காட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
படப்பை அடுத்த, ஒரகடத்தில் இருந்து, மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சிப்காட் சாலை உள்ளது. இச்சாலை வழியே நாள்தோறும் கார், பைக், கனரக வாகனங்கள் என, 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அருகே இச்சாலை சேதமடைந்து உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்குகின்றனர்.

இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, சேதமான சாலையை சீரமைக்க, ஒரகடம் சிப்காட் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி