நான் முதல்வன் திட்டத்தில் லண்டன் சென்ற மாணவர்கள்

84பார்த்தது
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சிக்காக லண்டன் சென்ற 25மாணவர்கள்

தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, வேலைவாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்பொழுது லண்டனின் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு ஒரு வார திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு பிரிட்டீஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பயிற்சிகளுக்கு 15பொறியியல் மற்றும் 10அறிவியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.

இவர்களுடன் இரு பேராசியர்களும் உடன் செல்கின்றனர்.‌அதிகாலை 5 மணியளவில் விமானம் மூலம் புறப்பட்ட மாணவர்களை அவர்களின் குடும்பத்தார் இன்முகத்தோடு வழியனுப்பினர்.

தொடர்புடைய செய்தி