வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்

66பார்த்தது
வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவக்கம்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாவட்ட தேர்தல் நிர்வாகம் தேர்தல் பணியை தீவிரபடுத்தி உள்ளது.

முதலாக அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என அறியும் இயந்திரம் ஆகியவை குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஆறு சட்டமன்ற தொகுதியில் அடங்கியுள்ள நிலையில் 1932 வாக்கு சாவடிகளுக்கான 2319 வாக்குப்பதிவு இயந்திரங்களில் தற்போது அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.


காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி தனியார் அறிவியல் கல்லூரியில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வைக்கப்பட்டிருந்த 396 வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்துக் கட்சி பிரமுகர் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் இருந்து வெளியே எடுக்கபட்டு இருபது தேர்தல் அலுவலர்கள் குழுக்கள் சின்னங்கள் பொருத்தும் பணியை ஈடுபட்டு வருகின்றனர்.