அதிமுக சார்பில் ரத்ததான முகாம்

75பார்த்தது
மாமல்லபுரம் அருகே முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்த நாளை தொடர்ந்து ரத்ததான முகாம் மாவட்ட செயலாளர் எஸ் ஆறுமுகம் பங்கேற்று துவக்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பையனூரில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளர் பையனூர் குமார் ஏற்பாட்டில் ரத்ததான முகாம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் காஞ்சிபுரம் தனித் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டு ரத்த தான முகாமை துவக்கி வைத்தனர் முகாமில் ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு பொது மருத்துவம் உள்ளிட்டவைகளும் பார்க்கப்பட்டது 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர் இரத்ததானம் வழங்கிய இளைஞர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்வந்த்ராவ் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆணூர் பக்தவச்சலம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஜிகே பாபு ஒன்றிய செயலாளர்கள் குட்டி (என்கிற) நந்தகுமார் தையூர் எஸ் குமரவேல் தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர அனைத்து அணி பொறுப்பாளர்கள் மகளிரணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி