மனைவிக்கு போட்ட ஸ்கெட்ச்.. மாமனார் பலி..

15571பார்த்தது
மனைவிக்கு போட்ட ஸ்கெட்ச்.. மாமனார் பலி..
தஞ்சாவூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ராஜமனோகரன் (71) என்பவர் தனது மகள் மனோ ரம்யாவை 2016ஆம் ஆண்டு ராஜ்குமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தம்பதிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனோ ரம்யா தந்தை வீட்டிற்கே சென்றுவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த ராஜ்குமார் கடந்த 16ஆம் தேதி ரம்யா வீட்டிற்குச் சென்றார். அங்கு குளியறைக்கு வரும் ரம்யாவை கொலை செய்ய திட்டமிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக மாமனார் வந்ததால் அவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். போலீசார் அவரை தேடி வந்த நிலையில் இன்று (மே 19) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி