காஞ்சி: ஆட்டோ, 3 கார்கள் தீயில் எரிந்து சேதம்

2973பார்த்தது
காஞ்சி: ஆட்டோ, 3 கார்கள் தீயில் எரிந்து சேதம்
ஓட்டேரி, ஏகாங்கிபுரம் பிரதான சாலையில், நேற்று அதிகாலை 2: 40 மணியளவில் மின்சார பகிர்மான பெட்டியில் இருந்து தீப்பொறி பறந்தது. இதில், கால்வாய் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள், ஒரு ஆட்டோ மீது தீப்பொறி விழுந்து பற்றி எரிந்தன.

இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும், வியாசர்பாடி மற்றும் செம்பியம் தீயணைப்பு வீரர்களும், 3: 15 மணியளவில் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர். இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்தில், அயனாவரத்தை சேர்ந்த ராமு என்பவரின் ஆட்டோ, தினேஷ் மற்றும் தமிழ்செல்வி மற்றும் திருப்போரூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் கார்கள் எரிந்து நாசமாகின.

டேக்ஸ் :