விமான நிலைய சேவை சீரானது

82பார்த்தது
சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரத்திற்கு பின்பு, இணையதள சேவைகள் சீரடைந்தன. இதையடுத்து பயணிகளுக்கு மேனுவல் போர்டிங் பாஸ் கொடுப்பது நிறுத்தப்பட்டு, மீண்டும் கம்ப்யூட்டர் மூலமாக போர்டிங் பாஸ் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

இதையடுத்து இன்று மாலைக்குள் சென்னை விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் சீரடைந்து விடும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மைக்ரோ சாப்ட்வேர் விண்டோஸ் செயல் இழப்பு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவைகள் பாதிக்கப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, மேலும் ஏராளமான விமானங்கள் பல மணி நேரம் தாமதம் ஆகி பல்லாயிரக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்தில் அவதிப்பட்டு கொண்டு இருந்தனர்.

அதோடு சென்னை விமான நிலைய பொறியாளர்கள், இணையதள தொழில் நுட்ப வல்லுநர்கள் இரவு பகலாக பணியாற்றி, ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சுமார் 24 மணி நேரத்துக்கு பின்பு, நேற்று காலை 11 மணியிலிருந்து, சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை சீரடைந்து உள்ளது.

நேற்றைய தினம் 24 நேரம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்ட சேவை பாதிப்பானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தொடர்புடைய செய்தி