ஏர்போர்ட் விரிவாக்க திட்டம் மத்திய, மாநில அதிகாரிகள் ஆலோசனை

64பார்த்தது
ஏர்போர்ட் விரிவாக்க திட்டம் மத்திய, மாநில அதிகாரிகள் ஆலோசனை
சென்னை விமான நிலையத்திற்கு வரும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில், 5, 368 ஏக்கரில் ஆண்டுக்கு 10 கோடி பயணியரை கையாளும் வகையில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளது. புதிய விமான நிலைய பணிகளை ஒருங்கிணைக்கும் முகமையாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி நிறுவனம் செயல்படுகிறது.

சென்னையில், விமான நிலையங்களின் ஆணைய உயரதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்க திட்டங்கள் குறித்து, தமிழக அரசு உட்பட பல துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர்.

அதில், தமிழக தொழில் துறை செயலர் அருண் ராய், 'டிட்கோ' மேலாண் இயக்குனர் சந்தீப் நந்துாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கூட்டத்தில், சென்னை விமான நிலையத்தில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட விரிவாக்க திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதற்கு, தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டது' என்றார்.

தொடர்புடைய செய்தி