ஒளிரும்தோட்டம் திட்டம் 10 மாதத்திற்கு பின் மீண்டும் துவக்கம்

56பார்த்தது
ஒளிரும்தோட்டம் திட்டம் 10 மாதத்திற்கு பின் மீண்டும் துவக்கம்
மாமல்லபுரத்தில் சிற்பங்களை ரசிப்பது தவிர்த்து, சுற்றுலா பயணியருக்கு வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. சிற்பங்களும் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

அவற்றை காணும் சுற்றுலா பயணியர் விரைவில் களைப்படைகின்றனர்.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தொல்லியல் துறை அலுவலகம் அருகில், கடந்த 2009ல் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் மரகத பூங்கா அமைத்தது.

இதில், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கென கற்களில் மேடை, பார்வையாளர் மாடம், மலர் செடிகள், புல்வெளி, வட்ட வடிவ ஓய்விருக்கை, நடைபாதை, விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டன.

துவக்கத்தில் சுற்றுலாத் துறையினர், வார இறுதியில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். நாளடைவில் புதர் சூழ்ந்து சீரழிந்தது.

சுற்றுலாத் துறையினர், 2018ல் புதரை அகற்றி மீண்டும் வார இறுதி கலைநிகழ்ச்சிகளை நடத்தியது. நிகழ்வின்போது பயணியரை அனுமதித்து, பின் மூடப்பட்டது.

பிரதமர் - சீன அதிபர் சந்திப்பின்போது, 30 லட்சம் ரூபாய் மதிப்பில், பேரூராட்சி நிர்வாகம் மேம்படுத்தியது. பராமரிப்பு செலவு கருதி, பின் கைவிடப்பட்டதால், மீண்டும் வீணானது.

கலங்கரை விளக்க பின்னணியுடன் உள்ள பூங்கா வளாகத்தை மேம்படுத்தி பயன்படுத்த, ஆர்வலர்கள் வலியுறுத்தியது குறித்து, நம் நாளிதழில் வெளியிடப்பட்டது. சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தனியார் நிறுவன பங்களிப்பில் செயல்படுத்த முடிவெடுத்தது.

தொடர்புடைய செய்தி