
கள்ளக்குறிச்சி: உலகியநல்லுாரில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லூர் சுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா நடந்தது. இதையொட்டி சக்தி அழைத்தல், பால்குடம் எடுத்தல் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்தன. பின் மூலவருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தேரில் வீதி உலா நடந்தது. பக்தர்கள் தேர்வழம் பிடித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்.