உளுந்தூர்பேட்டை - Ulundurpet

கரடிசித்துார்: கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கரடிசித்துார்: கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் கடைமடைக்குச் செல்லும் கோமுகி அணை பாசன வாய்க்காலை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் கோமுகி அணை கடைமடை பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கலெக்டரிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில் கோமுகி அணை உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், வருவாய் ஆய்வளார் பாபுகணபதி, கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் முன்னிலையில் பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: உட்கோட்டத்தில் 1, 031 வாகனங்கள் சோதனை
Oct 06, 2024, 06:10 IST/ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம்

கள்ளக்குறிச்சி: உட்கோட்டத்தில் 1, 031 வாகனங்கள் சோதனை

Oct 06, 2024, 06:10 IST
கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் கடந்த 2 தினங்களாக போலீசார் 1, 031 வாகனங்களை சோதனை செய்தனர். கள்ளக்குறிச்சி பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு இரவு நேரத்தில் 3 மணி நேரம் வாகன சோதனையில் ஈடுபட எஸ். பி. , ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி உட்கோட்ட போலீசார், கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இரவு 7: 00 மணியில் இருந்து 10: 00 மணி வரை பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், 1, 031 வாகனங்களை சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டியது 21 வாகனங்களும், மது அருந்தி ஓட்டியது என 27 வாகனங்களும் பறிமுதல் செய்து அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.