கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, திருநாவலூர் ஒன்றியம், பாதூர் ஊராட்சியில், மேல்நிலைப் பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமினை இந்த (ஜூலை 27) உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு பெட்டகத்தினை வழங்கினார். உடன் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.