நரிக்குறவர் இன மக்களிடம் ஓட்டு சேகரிப்பு

69பார்த்தது
நரிக்குறவர் இன மக்களிடம் ஓட்டு சேகரிப்பு
நீலமங்கலம் நரிக்குறவர் காலனி மக்களிடம் ஓட்டு சேகரித்த அ. தி. மு. க. , வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அ. தி. மு. க. , வேட்பாளர் குமரகுரு, நீலமங்கலம் நரிகுறவர் காலனி உட்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் தீவிரமாக ஓட்டு சேகரித்தார். அப்போது, நரிகுறவர் இன மக்கள் வேட்பாளர் குமரகுருவுக்கு பாசிமாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து, மலர்துாவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதில் செந்தில்குமார் எம். எல். ஏ. , முன்னாள் எம். எல். ஏ. , க்கள் அழகுவேல்பாபு, பிரபு, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், நகர செயலாளர் பாபு, ஜெ. , பேரவை செயலாளர் ஞானவேல் முன்னிலை வகித்தனர்.

இதில் நரிகுறவர் இன மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தும், அ. தி. மு. க. , ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மக்கள் பல திட்டங்களை எடுத்துரைத்து ஓட்டு சேகரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி