பைக் மீது கார் மோதல் லாரி டிரைவர் பலி

78பார்த்தது
பைக் மீது கார் மோதல் லாரி டிரைவர் பலி
சின்னசேலம் அடுத்த பங்காரத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி மகன் சதீஷ்குமார், 32; லாரி டிரைவர். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சதீஷ்குமார், 30; இருவரும் ஹோண்டா ஷைன் பைக்கில் நேற்று மாலை 6: 00 மணியளவில் கனியாமூரில் இருந்து தொட்டியம் நோக்கிச் சென்றனர்.

நமச்சிவாயபுரம் அருகே சென்ற போது, எதிரே வந்த வோக்ஸ் வேகன் கார், ச. சதீஷ்குமார் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ச. சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, படுகாயமடைந்த க. சதீஷ்குமாரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :